திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருட் பெருமை
tiruvaruṭ perumai
உபதேச உண்மை
upatēsa uṇmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

054. அருள் ஆரமுதப் பேறு
aruḷ āramutap pēṟu

    கலிவிருத்தம்
    பண்: நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
    கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
    பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
    அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 2. விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
    தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
    கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
    அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 3. துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
    செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
    எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
    அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 4. மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
    கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
    செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
    ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 5. பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
    குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
    செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பே
    ரறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 6. முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
    சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
    பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
    அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 7. தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
    மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
    பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
    அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 8. ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
    வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
    தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
    அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 9. மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
    தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
    பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
    அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 10. முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
    இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
    பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
    அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 11. பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
    சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
    தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
    லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 12. தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
    தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
    வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
    ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
  • 13. பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
    செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
    கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
    அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.

ஆரமுதப் பேறு // அருள் ஆரமுதப் பேறு