திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வேண்டுகோள்
vēṇṭukōḷ
செய்பணி வினவல்
seypaṇi viṉaval
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

060. உலப்பில் இன்பம்
ulappil iṉpam

    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
    தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
    பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
    தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
  • 2. கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
    சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
    மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
    யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
  • 3. எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
    சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
    அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
    வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
  • 4. வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
    ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
    சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
    தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
  • 5. தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
    கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
    ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
    ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
  • 6. கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
    சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
    பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
    வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
  • 7. எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
    நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
    கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
    பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
  • 8. பரமான சிதம்பர ஞான சபாபதியே
    வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
    தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
    உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
  • 9. தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
    நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
    காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
    சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
  • 10. பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
    மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
    எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
    நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.

உலப்பில் இன்பம் // உலப்பில் இன்பம்

No audios found!