திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உய்வகை கூறல்
uyvakai kūṟal
தலைவி கூறல்
talaivi kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

102. இறைவரவு இயம்பல்
iṟaivaravu iyampal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
    அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
    கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
    எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
    இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
    எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
    செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
    செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
  • 2. இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
    எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
    நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
    நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
    முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
    மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
    பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
    பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
  • 3. என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
    எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
    தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
    சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
    மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
    வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
    உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
    உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
  • 4. எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
    எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
    நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
    நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
    பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
    பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
    எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
    இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
  • 5. கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
    கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
    தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
    சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
    திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
    திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
    வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
    வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
  • 6. உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
    துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
    வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
    வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
    கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
    குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
    நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
    நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
  • 7. மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
    வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
    மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
    விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
    நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
    நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
    தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
    தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
  • 8. மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
    வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
    நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
    நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
    கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
    குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
    சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
    தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
  • 9. ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
    இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
    ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
    உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
    தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
    திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
    ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
    எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
  • 10. தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
    சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
    கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
    கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
    இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
    இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
    பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
    பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.

இறைவரவு இயம்பல் // இறைவரவு இயம்பல்

No audios found!