திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நீடிய வேதம்
nīṭiya vētam
பத நம்புறு
pata nampuṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

145. வேத சிகாமணியே
vēta sikāmaṇiyē

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. வேத சிகாமணியே போத சுகோதயமே
    மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
    நாத பராபரமே சூத பராவமுதே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 2. ஏக சதாசிவமே யோக சுகாகரமே
    ஏம பராநலமே காம விமோசனமே
    நாக விகாசனமே நாத சுகோடணமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 3. தூய சதாகதியே நேய சதாசிவமே
    சோம சிகாமணியே வாம உமாபதியே
    ஞாய பராகரமே காய புராதரமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 4. ஆரண ஞாபகமே பூரண சோபனமே
    ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
    நாரண னாதரமே காரண மேபரமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 5. ஆகம போதகமே யாதர வேதகமே
    ஆமய மோசனமே ஆரமு தாகரமே
    நாக நடோதயமே நாத புரோதயமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 6. ஆடக நீடொளியே நேடக நாடளியே
    ஆதி புராதனனே வேதி பராபரனே
    நாடக நாயகனே நானவ னானவனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 7. ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
    ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
    நாரிய னேவரனே நாடிய னேபரனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 8. ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
    ஆரணி பாதியனே ஆதர வாதியனே
    நாத விபூதியனே நாம வனாதியனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 9. தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
    தீன சகாநிதியே சேகர மாநிதியே
    நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.
  • 10. ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
    ஆகம மேலவனே ஆரண நாலவனே
    நாடிய காரணனே நீடிய பூரணனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே.

ஞான சபாபதியே // வேத சிகாமணியே