திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திரு அருட் கிரங்கல்
tiru aruṭ kiraṅkal
நெஞ்சு நிலைக் கிரங்கல்
neñsu nilaik kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

063. எண்ணத் திரங்கல்
eṇṇat tiraṅkal

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
    களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
    வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
    அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 2. முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
    இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
    பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
    அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 3. இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
    வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
    எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
    அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 4. ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
    மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
    சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
    ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 5. பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
    கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
    மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
    ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 6. இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
    விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
    செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
    அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 7. புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
    தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
    விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
    அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 8. இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமி
    வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
    கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
    அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 9. மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
    சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
    செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
    அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
  • 10. துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
    வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
    இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
    அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

எண்ணத் திரங்கல் // எண்ணத் திரங்கல்

No audios found!