திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அம்மை திருப்பதிகம்
ammai tiruppatikam
ஆனந்த களிப்பு
āṉanta kaḷippu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

101. கலைமகளார் திருப்பதிகம்
kalaimakaḷār tiruppatikam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
    குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
    பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
    கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
  • 2. சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
    துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
    திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
    தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
  • 3. கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
    நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
    தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
    சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.

கலைமகள் வாழ்த்து // கலைமகளார் திருப்பதிகம்