திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பொதுத் தனித் திருவெண்பா
potut taṉit tiruveṇpā
தனித் திருப்புலம்பல்
taṉit tiruppulampal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

090. திருக்குறிப்பு நாட்டம்
tirukkuṟippu nāṭṭam

  ஆசிரியத் துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
  ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
  பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
  சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
  சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
  காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
 • 2. ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
  நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
  சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
  சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
  தாவி நான்பெரும் பாவி ஆயினன்
  ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
 • 3. அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை
  ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
  நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
  பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப்
  பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
  கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ.
 • 4. வல்லி ஆனந்த வல்லி சேர்மண
  வாள னேஅரு ளாள னேமலை
  வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
  புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
  பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
  இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.

திருக்குறிப்பு நாட்டம் // திருக்குறிப்பு நாட்டம்