திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவகாமவல்லி துதி
sivakāmavalli tuti
நடராஜ அலங்காரம்
naṭarāja alaṅkāram
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

078. சிவ பரம்பொருள்
siva paramporuḷ

    கலிநிலைத் துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
    இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
    கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
    பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
  • 2. களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்
    வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்
    விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு
    துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன்.
  • 3. வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
    பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
    ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
    செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
  • 4. உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
    சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
    நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
    தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.

சிவ பரம்பொருள் // சிவ பரம்பொருள்

No audios found!