திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடேசர் கொம்மி
naṭēsar kommi
நடேசர் கீர்த்தனை
naṭēsar kīrttaṉai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

106. சிலதா ஸம்வாதம்
silatā shamvātam

  தாழிசை
  திருச்சிற்றம்பலம்
 • 1. தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
  தான்கொண்ட நாயக ராரே டி
  அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
  ஐய ரமுத ரழக ரடி.
 • 2. செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
  செங்கை பிடித்தவ ராரே டி
  அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
  ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
 • 3. கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
  கன்னி யழித்தவ ராரே டி
  உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
  உத்தம ரானந்த சித்த ரடி.
 • 4. தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
  சேர்ந்து கலந்தவ ராரே டி
  தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
  தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
 • 5. அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
  அன்பிற் புணர்ந்தவ ராரே டி
  துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
  தூய திருநட ராய ரடி.
 • 6. காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
  கற்பை யழித்தவ ராரே டி
  பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
  பித்தர் பரானந்த நித்த ரடி.

தோழியர் உரையாடல் // சிலதா ஸம்வாதம்