திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபயம் அபயம் அபயம்
apayam apayam apayam
ஆணிப்பொன்னம்பலக் காட்சி
āṇippoṉṉampalak kāṭsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

127. அற்புதம் அற்புதமே
aṟputam aṟputamē

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. அற்புதம் அற்புத மே - அருள்
  அற்புதம் அற்புத மே.
 • கண்ணிகள்
 • 2. சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
  சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
  கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
  கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
 • 3. செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
  சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
  இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
  இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
 • 4. ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
  அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
  ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
  என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
 • 5. சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
  சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
  நித்திய ஞான நிறையமு துண்டனன்
  நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
 • 6. வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
  வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
  தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
  சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
 • 7. புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
  பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
  மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
  வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
 • 8. வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
  வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
  செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
  சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
 • 9. சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
  சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
  மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
  மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
 • 10. அற்புதம் அற்புத மே - அருள்
  அற்புதம் அற்புத மே.

அருள் அற்புதம் // அற்புதம் அற்புதமே