திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பசியாத அமுதே
pasiyāta amutē
வேத சிகாமணியே
vēta sikāmaṇiyē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

144. நீடிய வேதம்
nīṭiya vētam

  கலிவிருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. நீடிய வேதம் தேடிய பாதம்
  நேடிய கீதம் பாடிய பாதம்
  ஆடிய போதம் கூடிய பாதம்
  ஆடிய பாதம் ஆடிய பாதம்.
 • 2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
  தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
  சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
  தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
 • 3. ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
  ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
  ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
  ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
 • 4. சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
  தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
  கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
  குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
 • 5. எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
  எண்ணிய வாறே நண்ணிய பேறே
  புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
  புண்ணிய வானே புண்ணிய வானே.
 • 6. தொத்திய சீரே பொத்திய பேரே
  துத்திய பாவே பத்திய நாவே
  சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
  சத்திய வானே சத்திய வானே.
 • 7. எம்புலப் பகையே எம்புலத் துறவே
  எம்குலத் தவமே எம்குலச் சிவமே
  அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
  அம்பலத் தரசே அம்பலத் தரசே.
 • 8. இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
  எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
  அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
  அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.

அம்பலத்தமுதே // நீடிய வேதம்