திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
விரைசேர் சடையாய்
viraisēr saṭaiyāy
நீடிய வேதம்
nīṭiya vētam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

143. பசியாத அமுதே
pasiyāta amutē

  தாழிசை
  திருச்சிற்றம்பலம்
 • 1. பசியாத அமுதே பகையாத பதியே
  பகராத நிலையே பறையாத சுகமே
  நசியாத பொருளே நலியாத உறவே
  நடராஜ மணியே நடராஜ மணியே.
 • 2. புரையாத மணியே புகலாத நிலையே
  புகையாத கனலே புதையாத பொருளே
  நரையாத வரமே நடியாத நடமே
  நடராஜ நிதியே நடராஜ நிதியே.
 • 3. சிவஞான நிலையே சிவயோக நிறைவே
  சிவபோக உருவே சிவமான உணர்வே
  நவநீத மதியே நவநாத கதியே
  நடராஜ பதியே நடராஜ பதியே.
 • 4. தவயோக பலமே சிவஞான நிலமே
  தலையேறும் அணியே விலையேறு மணியே
  நவவார நடமே சுவகார புடமே
  நடராஜ பரமே நடராஜ பரமே.
 • 5. துதிவேத உறவே சுகபோத நறவே
  துனிதீரும் இடமே தனிஞான நடமே
  நதியார நிதியே அதிகார பதியே
  நடராஜ குருவே நடராஜ குருவே.
 • 6. வயமான வரமே வியமான பரமே
  மனமோன நிலையே கனஞான மலையே
  நயமான உரையே நடுவான வரையே
  நடராஜ துரையே நடராஜ துரையே.
 • 7. பதியுறு பொருளே பொருளுறு பயனே
  பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
  மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
  மறைமுடி மணியே மறைமுடி மணியே.
 • 8. அருளுறு வெளியே வெளியுறு பொருளே
  அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
  மருளறு தெருளே தெருளுறு மொளியே
  மறைமுடி மணியே மறைமுடி மணியே.
 • 9. தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
  தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
  திருவளர் உருவே உருவளர் உயிரே
  திருநட மணியே திருநட மணியே.
 • 10. உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
  ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
  செயிரறு பதியே சிவநிறை நிதியே
  திருநட மணியே திருநட மணியே.
 • 11. கலைநிறை மதியே மதிநிறை அமுதே
  கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
  சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
  திருநட மணியே திருநட மணியே.
 • 12. மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
  விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
  திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
  திருநட மணியே திருநட மணியே.
 • 13. இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
  இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
  செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
  திருநட மணியே திருநட மணியே.
 • 14. புரையறு புகழே புகழ்பெறு பொருளே
  பொருளது முடிபே முடிவுறு புணர்வே
  திரையறு கடலே கடலெழு சுதையே
  திருநட மணியே திருநட மணியே.
 • 15. நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே
  நிறையருள் நிதியே நிதிதரு பதியே
  திகழ்சிவ பதமே சிவபத சுகமே
  திருநட மணியே திருநட மணியே.

திருநட மணியே // பசியாத அமுதே