திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருளியல் வினாவல்
aruḷiyal viṉāval
காட்சிப் பெருமிதம்
kāṭsip perumitam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

013. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
tirumullaivāyil tiruviṇṇappam

  கலிவிருத்தம்
  திருசிற்றம்பலம்
 • 1. தாயின் மேவிய தற்பர மேமுல்லை
  வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
  கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
  தேயின் மேவி இருந்தனன் என்னையே.
 • 2. தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
  முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
  தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
  எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
 • 3. வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
  குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
  உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
  களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
 • 4. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
  விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
  குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
  தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
 • 5. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
  ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
  தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
  ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
 • 6. சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
  பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
  மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
  கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
 • 7. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
  அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
  கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
  நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
 • 8. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
  கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
  எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
  பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
 • 9. தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
  கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
  வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
  ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
 • 10. தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
  மாசி லாமணி யேமருந் தேசற்றும்
  கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
  பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.

திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம் // திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்

No audios found!