Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அருண்மொழி மாலை
aruṇmoḻi mālai
கண் நிறைந்த கணவன்
kaṇ niṟainta kaṇavaṉ
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
059. இன்ப மாலை
iṉpa mālai
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
2.
கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
3.
வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென்
மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால்
ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே.
4.
இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்
கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.
5.
ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
வசியர் மிகநீ ரென்றேனென் மகனே யென்றார் வளர்காமப்
பசிய துடையே னென்றேனுட் பணியல் குலுமப் படியென்றார்
நிசிய மிடற்றீ ராமென்றேன் நீகண் டதுவே யென்றாரே.
6.
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர்
மலையா ளுமது மனைவியென்றேன் மலைவா ளுனைநான் மருவினென்றார்
அலையாண் மற்றை யவளென்றே னலைவா ளவளு மறியென்றார்
நிலையாண் மையினீ ராவென்றே னீயா வென்று நின்றாரே.
7.
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
8.
ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும்
பால ராமென் றுரைத்தேனாம் பால ரலநீ பாரென்றார்
மேல ராவந் திடுமென்றேன் விளம்பேல் மகவு மறியுமென்றார்
கோல ராமென் றுரைத்தேன்யாங் கொண்டோ முக்க ணென்றாரே.
9.
வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர்
உண்மை யுடையீ ரென்றேனா முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
கண்மை யுடையீ ரென்றேனீ களமை யுடையேம் யாமென்றார்
தண்மை யருளீ ரென்றேனாந் தகையே யருள்வ தென்றாரே.
10.
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
11.
கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார்
துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென்
பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே.
இன்ப மாலை // இன்ப மாலை
No audios found!
Oct,12/2014: please check back again.