6. செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
14. சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.