திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பத்தி மாலை
patti mālai
அதிசய மாலை
atisaya mālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

006. செளந்தர மாலை
seḷantara mālai

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
  சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
  மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
  விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
  பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
  பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
  மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
  வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
 • 2. இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
  இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
  வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
  மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
  அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
  ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
  துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
  தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
 • 3. சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
  சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
  நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
  நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
  பவயோக இந்தியமும் இன்பமய மான
  படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
  தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
 • 4. சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
  சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
  முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
  மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
  புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
  போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
  பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
  படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
 • 5. தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
  சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
  சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
  தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
  ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
  அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
  உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
  உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
 • 6. தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
  சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
  வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
  மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
  நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
  நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
  நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
  நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
 • 7. சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
  சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
  உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
  உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
  மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
  வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
  பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
  பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
 • 8. ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
  ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
  பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
  பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
  சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
  சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
  ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
  உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
 • 9. பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
  பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
  சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
  தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
  சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
  தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
  நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
  நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
 • 10. என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
  இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
  இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
  இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
  அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
  அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
  என்புருக மனஞான மயமாகும் என்றால்
  எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
 • 11. கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
  கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
  விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
  வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
  இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
  இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
  அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
  யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
 • 12. காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
  கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
  வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
  வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
  ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
  அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
  ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
  இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.

செளந்தர மாலை // செளந்தர மாலை