திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவயோக நிலை
sivayōka nilai
பேரருள் வாய்மையை வியத்தல்
pēraruḷ vāymaiyai viyattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

094. அழிவுறா அருள்வடிவப் பேறு
aḻivuṟā aruḷvaṭivap pēṟu

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
  நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
  தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
  பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
 • 2. விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
  களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
  விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
  உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
 • 3. விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
  எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
  அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
  துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
 • 4. ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
  தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
  பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
  ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
 • 5. இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
  துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
  புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
  அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
 • 6. சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
  துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
  மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
  பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
 • 7. வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
  மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
  கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
  தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
 • 8. தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
  காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
  நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
  பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
 • 9. தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
  கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
  இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
  புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
 • 10. கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
  மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
  ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
  செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.

அழிவுறா அருள்வடிவப் பேறு // அழிவுறா அருள்வடிவப் பேறு

No audios found!