திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உலப்பில் இன்பம்
ulappil iṉpam
ஆற்ற மாட்டாமை
āṟṟa māṭṭāmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

061. செய்பணி வினவல்
seypaṇi viṉaval

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
    தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
    பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
  • 2. ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
    திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
    உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
  • 3. அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
    சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
    நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
  • 4. பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
    செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
    நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
  • 5. ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
    தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
    நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
  • 6. இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
    தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
    தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
  • 7. மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
    சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
    திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
  • 8. ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
    தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
    தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
  • 9. ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
    சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
    தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
  • 10. மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
    தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
    பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
  • 11. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
    ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
    நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
    ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
  • 12. பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
    சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
    திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
    அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2

    • 278. 4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக்கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதிகருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.

செய்பணி வினவல் // செய்பணி வினவல்

No audios found!