திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவபுண்ணியப் பேறு
sivapuṇṇiyap pēṟu
சன்மார்க்க நிலை
saṉmārkka nilai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

071. அந்தோ பத்து
antō pattu

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
    ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
  • 2. சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
  • 3. துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
    கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
  • 4. மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
    அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
  • 5. துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
    அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
  • 6. பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
    அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
  • 7. பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
    ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
  • 8. தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
    அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
  • 9. பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
    அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
  • 10. மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
    அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன் அந்தோ அந்தோ.
  • 11. எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
    அக்கரைசேர்த் தருளெனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ315.

    • 315. இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி இப் -பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.

ஆனந்தப் பரிவு // அந்தோ பத்து