திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சமாதி வற்புறுத்தல்
samāti vaṟpuṟuttal
தனித் திருஅலங்கல்
taṉit tirualaṅkal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

109. உலகப்பேறு
ulakappēṟu

  கலிவிருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
  துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
  அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
  என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
 • 2. பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
  தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
  ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
  தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
 • 3. மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
  வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
  பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
  நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
 • 4. முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
  மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
  பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
  என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
 • 5. இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
  மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
  திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
  நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
 • 6. அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
  கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
  பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
  எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
 • 7. குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
  மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
  பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
  இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
 • 8. பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
  முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
  சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
  சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
 • 9. ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
  ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
  ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
  வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
 • 10. இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
  மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
  தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
  தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.

உலகப்பேறு // உலகப்பேறு

No audios found!