திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)
ñāṉasariyai (vāypaṟai ārttal)
உலகப்பேறு
ulakappēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

108. சமாதி வற்புறுத்தல்
samāti vaṟpuṟuttal

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
  தருணம்இதே அறிமின் என்றே
  வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
  கின்றார்இம் மனிதர்அந்தோ
  தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
  உளங்கலந்த தலைவா இங்கே
  நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
  இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
 • 2. இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
  தருணம்இதே என்று வாய்மை
  அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
  வார்த்தைகள்என் றறைகின் றாரால்
  மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
  எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
  சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
  மனிதர்மதித் திறமை என்னே.
 • 3. சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
  படுவாரைத் துணிந்து கொல்லக்
  கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
  துண்மையினில் கொண்டு நீவீர்
  நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
  போலும்அன்றி நினைத்த வாங்கே
  பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
  பதிப்புகழைப் பேசு வீரே.
 • 4. தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
  உலகாளச் சூழ்ந்த காமப்
  பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
  நும்முயிரைப் பிடிக்க நாளைச்
  சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
  ஞானசபைத் தலைவன் உம்மைக்
  கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
  இவ்வுலகில் குலாவு வீரே.
 • 5. பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
  திடுகின்றீர் பேய ரேநீர்
  இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
  மதித்தீரோ இரவில் தூங்கி
  மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
  நும்மனத்தை வயிரம் ஆன
  சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
  ஏன்பிறந்து திரிகின் றீரே.
 • 6. அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
  பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
  பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
  இனிச்சாகும் பிணங்க ளேநீர்
  கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
  என்னபயன் கண்டீர் சுட்டே
  எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
  எருவுக்கும் இயலா தன்றே.
 • 7. குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
  டால்அதுதான் கொலையாம் என்றே
  வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
  சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
  பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
  சம்மதிக்கும் பேய ரேநீர்
  எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
  கஞ்சுவரே இழுதை யீரே.
 • 8. கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
  பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
  பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
  சுடுகின்றீர் புதைக்க நேரீர்
  சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
  துடியாதென் சொல்லீர் நும்மைத்
  தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
  கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
 • 9. பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
  ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
  சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
  பற்பலரும் சித்த சாமி
  உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
  தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
  வரனளிக்கப் புதைத்தநிலை கா­ரோ
  கண்கெட்ட மாட்டி னீரே.
 • 10. புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
  கருங்கடலில் போக விட்டீர்
  கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
  சுடுகின்ற கொடுமை நோக்கிக்
  கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
  கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
  தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
  புரிகுவதித் தருணம் தானே.

சமாதி வற்புறுத்தல் // சமாதி வற்புறுத்தல்

No audios found!