திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அந்தோ பத்து
antō pattu
சிவானந்தப் பற்று
sivāṉantap paṟṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

072. சன்மார்க்க நிலை
saṉmārkka nilai

  நேரிசை வெண்பா
  திருச்சிற்றம்பலம்
 • 1. சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
  சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
  உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
  துள்ளல் ஒழிக தொலைந்து.
 • 2. ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
  நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
  நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
  இடம்புரிக வாழ்க இசைந்து.
 • 3. சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
  நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
  போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
  நாற்றிசையும் வாழ்க நயந்து.
 • 4. அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
  விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
  ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
  நீதிக் கொடிவிளங்க நீண்டு.
 • 5. கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
  அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
  நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
  தெல்லோரும் வாழ்க இசைந்து.
 • 6. புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
  நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
  செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
  ஒத்தாராய் வாழ்க உவந்து.
 • 7. செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
  இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
  சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
  துன்மார்க்கம் போக தொலைந்து.
 • 8. செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
  சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
  சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
  என்மார்க்கம் நின்மார்க்க மே.
 • 9. நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
  வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
  நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
  சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.
 • 10. ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
  சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
  இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
  கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
 • 11. நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
  சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
  பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
  யார்உளர்நீ சற்றே அறை.

சன்மார்க்க உலகின் ஒருமைநிலை // சன்மார்க்க நிலை

No audios found!