திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இது நல்ல தருணம்
itu nalla taruṇam
வருவார் அழைத்துவாடி
varuvār aḻaittuvāṭi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

122. என்ன புண்ணியம் செய்தேனோ
eṉṉa puṇṇiyam seytēṉō

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
  என்ன புண்ணியம் செய்தே னோ.
 • பல்லவி எடுப்பு
 • 2. மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
  சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன
 • கண்ணிகள்
 • 3. பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
  போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
  அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
  ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
 • 4. பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
  பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
  ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
  அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
 • 5. எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
  எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
  மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
  மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
 • 6. ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
  ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
  ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
  டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
 • 7. அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
  அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
  சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
  சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன
 • 8. ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
  ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
  காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
  காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
 • 9. பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
  பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
  வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
  வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
 • 10. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
  என்ன புண்ணியம் செய்தே னோ.

என்ன புண்ணியம் செய்தேனோ // என்ன புண்ணியம் செய்தேனோ