திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பேரருள் வாய்மையை வியத்தல்
pēraruḷ vāymaiyai viyattal
நடராஜபதி மாலை
naṭarājapati mālai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

096. பொன்வடிவப் பேறு
poṉvaṭivap pēṟu

  நேரிசை வெண்பா
  திருச்சிற்றம்பலம்
 • 1. அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
  பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
  அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
  கொள்ளற் கபயங் கொடு.
 • 2. ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
  சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
  பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
  தாடிக் களிக்க அருள்.
 • 3. இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
  சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
  தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
  பொன்னேர் பதத்தைப் புகழ்.
 • 4. ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
  ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
  போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
  போற்றும் படிப்பெற்ற போது.
 • 5. உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
  வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
  கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
  பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
 • 6. ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
  ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
  பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
  அருட்பெருஞ் சோதி அது.
 • 7. எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
  நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
  கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
  உண்டுவியக் கின்றேன் உவந்து.
 • 8. ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
  தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
  கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
  ஈசனத்தன் அம்பலவ னே.
 • 9. ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
  பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
  தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
  மொழிஆடு தற்கு முனம்.
 • 10. ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி
  அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்
  வந்தான் இரவி வருதற்கு முன்கருணை
  தந்தானென் னுட்கலந்தான் தான்.
 • 11. ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
  சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
  ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
  வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
 • 12. ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
  செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
  விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
  நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
 • 13. சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
  நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்
  கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்
  விடவுளே நின்று விளங்கு.
 • 14. துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
  அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
  அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
  பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
 • 15. தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
  ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
  நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
  தாங்கினேன் சத்தியமாத் தான்.
 • 16. துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
  அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
  தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
  ஓங்கினேன் உண்மை உரை.

  • 330. நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.நிரைந்தொன்றாய் - பி. இரா. ' நிரந்தொன்றாய் ' என்பது அடிகள் எழுத்து.

பொன்வடிவப் பேறு // பொன்வடிவப் பேறு

No audios found!